ஈரானுடனான போரால் 29 பில்லியன் டொலரை இழந்த அமெரிக்கா - பென்டகன் அதிர்ச்சித் தகவல்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை பல பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளதாக அமெரிக்காவின் மூத்த பென்டகன் அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 29 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த போர் விழுங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது பழுதடைந்த ராணுவக் கருவிகளைச் சரிசெய்வதற்கே பெரும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த மாதத்தை விட இம்மாதம் 4 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்




