மாணவர்களின் 76 கோடி கல்விக் கடனை அடைத்த தொழிலதிபர்!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், இந்திய வம்சாவளி தொழிலதிபர் அனில் கோச்சார் ஒரு நெகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்.
அங்கு பட்டம் பெற்ற 202 மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விக் கடனான 76.18 கோடியை தானே ஏற்பதாகக் கூறி, அதற்கான தொகையை வழங்கினார்.
1950-களில் இதே கல்லூரியில் படித்து ஜவுளித்துறையில் சாதித்த தனது தந்தை பிரகாஷ் கோச்சாரின் நினைவாக இந்த உதவியைச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் கடன் சுமையின்றி தங்களது எதிர்காலத்தைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட இந்த மனிதாபிமானச் செயலை நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட உலக ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.




