ட்ரம் சீனா பயணம் - பல நிறுவனங்களின் அதிபர்களுக்கும் அழைப்பு!

இந்த வாரம் அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் சீனப் பயணத்தில் அவருடன் கலந்துகொள்ளுமாறு எலான் மஸ்க் மற்றும் டிம் குக் ஆகியோருக்கு வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
போயிங், கோல்ட்மேன் சாக்ஸ், பிளாக்ஸ்டோன், பிளாக்ராக், சிட்டிகுரூப் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த பயணத்தின்போது சீனாவுடன் "தொடர்ச்சியான வணிக ஒப்பந்தங்களை" இறுதி செய்ய முடியும் என டிரம்ப் நம்புகிறார்.




