SuperTopAds

ஈரான் வழங்கிய பதிலைத் ஏற்கப்போவதில்லை - அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
ஈரான் வழங்கிய பதிலைத் ஏற்கப்போவதில்லை - அமெரிக்கா!

ஈரான் - அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக

அமெரிக்கா முன்வைத்த சமாதானத் திட்டத்திற்கு ஈரான் வழங்கிய பதிலைத் தான் ஏற்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா அண்மையில் சில நிபந்தனைகளை முன்வைத்திருந்தது.

இதற்கு ஈரான்  தனது உத்தியோகபூர்வ பதிலை வழங்கியிருந்தது.

இந்தநிலையில், இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தள பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது ஈரானின் பிரதிநிதிகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து வந்த பதிலை நான் இப்போதுதான் வாசித்தேன்.

அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.

ஈரானின் பதில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம்  வழங்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தன.

தற்போது ஜனாதிபதியின் இந்த அதிரடிப் பதில் காரணமாக, போர் நிறுத்த முயற்சி பின்னடைவைச் சந்தித்துள்ளதோடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது

Radio