சீனாவிலிருந்து தடையின்றிக் கிடைகும் ட்ரோன் பாகங்கள் - ஈரான் ரஷ்யாவின் இறக்குமதியால் திணறும் அமெரிக்கா!

ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்குத் தேவையான ட்ரோன் பாகங்கள் சீனாவிலிருந்து தங்குதடையின்றி கிடைப்பதைத் தடுக்க முடியாமல் அமெரிக்கா சவால்களை சந்தித்து வருகிறது.
சீனாவின் சிறிய நிறுவனங்கள் ட்ரோன் தயாரிப்பிற்குத் தேவையான இன்ஜின்கள், பேட்டரிகள், மைக்ரோசிப்கள் மற்றும் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களை வெளிப்படையாகவே ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்த பாகங்கள் சாதாரண வணிகப் பயன்பாட்டிற்கும் உதவுவதால், இவற்றின் மீது தடை விதிப்பது அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
Xiamen Victory Technology என்ற சீன நிறுவனம், ஜெர்மன் வடிவமைப்பிலான 'L550' இன்ஜின்களைச் சந்தைப்படுத்தி வருகிறது.
இந்த இன்ஜின்கள் தான் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ஈரானின் Shahed-136 தாக்குதல் ட்ரோன்களில் பொருத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் மிகச் சிறியவை என்பதால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இவர்களைப் பெரிய அளவில் பாதிப்பதில்லை.
மேலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி மூலம் மிக எளிதாக இந்தப் பொருட்கள் கைமாறுகின்றன.




