எமது எரிபொருள் விற்பனையை எவரும் கட்டுப்படுத்த முடியாது - அமெரிக்காவுக்கு புடின் அறிவுறுத்து!

ரஷ்யாவின் எரிசக்தி வளங்களை உலக சந்தையில் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் அனுமதியோ அல்லது கட்டுப்பாடோ தங்களுக்குத் தேவையில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் "நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எமது எண்ணெயை விற்பனை செய்வோம்" என அவர் குறிப்பிட்டுள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான போர் சூழலைத் தொடர்ந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மீறி, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ரஷ்யா பாரிய அளவில் கச்சா எண்ணெயை விநியோகித்து வரும் நிலையில் புடினின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு, உலகளாவிய எரிசக்தி அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது




