ஜப்பான் - சவூதி அரேபியா இடையே கூட்டு எரிசக்தி குழு அமைக்க ஒப்பந்தம்!

நிலையான எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, ஜப்பானும் சவூதி அரேபியாவும் ஒரு கூட்டு எரிசக்தி பாதுகாப்புப் பணிக்குழுவை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது
ஜப்பானியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் மூலம் சவூதி பட்டத்து இளவரசருக்கு அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அடுத்த வாரத் தொடக்கத்தில் கூட்டங்கள் தொடங்கும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.




