எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட தமிழீழ தேசிய அடையாள அட்டை

விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட தமிழீழ தேசிய அடையாள அட்டை ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, சாளம்பன்- பாண்டியன்குளத்தை சேர்ந்த 55 வயதுடைய சுப்பையா வில்வராசா என்பவரின் அடையாள அட்டையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உடைமைகள் சேதங்களுக்குள்ளான நிலையில் இன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆங்காங்கே அவதானிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த நபரின் அடையாள அட்டை சேதமாக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.