இஸ்ரேலில் ஹன்டா வைரஸ் அச்சுறுத்து - பலர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் முதன்முறையாக ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினாவிலிருந்து கேப் வெர்டே நோக்கிச் சென்று கொண்டிருந்த 'MV Hondius' என்ற சொகுசுக் கப்பலில் பயணித்த சுற்றுலாப் பயணிகளுக்கே இந்தத் தொற்று முதலில் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் பாதிப்பால் ஏற்கனவே சிலர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொற்று பரவல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.




