ட்ரம்பின் "புராஜெக்ட் ஃப்ரீடம்" திட்டம் தோல்வி - பின்னணியில் சவுதி அரேபியா!

சவூதி அரேபியாவும் குவைத்தும் தங்கள் தளங்கள், வான்வெளி மற்றும் வான்வழிப் பயணங்களுக்கான அமெரிக்க இராணுவ அணுகலை இடைநிறுத்தியதால், ட்ரம்பின் "புராஜெக்ட் ஃப்ரீடம்" திட்டம் தோல்வியடைந்தது என என்பிசி நியூஸ் மற்றும் ரியான் கிரிம் தெரிவிக்கின்றனர்.
இளவரசர் சுல்தான் விமானத்தளத்திலிருந்து அல்லது சவூதி வான்வெளி வழியாக அமெரிக்கா விமானங்களை இயக்குவதை முகமது பின் சல்மான் தடுத்தார்.
இதனால், அந்த நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதுடன், பயணத்தில் உள்ள கப்பல்களைப் பாதுகாக்கும் வான் பாதுகாப்பு அமைப்பும் அகற்றப்பட்டது.
தங்களுக்குத் தெரிவிக்காமல், ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் புராஜெக்ட் ஃப்ரீடம் திட்டத்தை அறிவித்ததால் பின் சல்மான் கடும் கோபமடைந்தார்.
இந்த நடவடிக்கை தொடங்கிய பின்னரே ட்ரம்ப் அவர்களைத் தொடர்பு கொண்டதால், கத்தார் மற்றும் ஓமானும் அதிர்ச்சிக்குள்ளாயின.
ட்ரம்ப்பிற்கும் பட்டத்து இளவரசருக்கும் இடையேயான நேரடித் தொலைபேசி உரையாடல் நிலைமையைச் சரிசெய்யத் தவறிவிட்டது.




