SuperTopAds

இரேலின் காசா இனப்படுகொலை - ஸ்பெயினுடன் இணைந்து வலியுறுத்தும் ஸ்லோவேனியா!

ஆசிரியர் - Editor IV
இரேலின் காசா இனப்படுகொலை - ஸ்பெயினுடன் இணைந்து வலியுறுத்தும் ஸ்லோவேனியா!

காசாவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையைத் தடுக்கவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்பெயினுடன் இணைந்து ஸ்லோவேனியா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஸ்லோவேனிய பிரதமர் ராபர்ட் கோலோப் வெளியிட்டுள்ள அறிக்கையில் -

சர்வதேச நீதிமன்றங்களின் சுதந்திரத்தில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது என்றும், மனித உரிமைகள் சார்ந்த ஐரோப்பிய விழுமியங்களுக்கு விலை பேச முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

முன்னதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை முறியடிக்க 'தடுப்புச் சட்டத்தை' அமுல்படுத்துமாறு ஐரோப்பிய ஆணையத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio