SuperTopAds

மேற்காசிய விவகாரத்தில் தென்கொரியா தலையிட்டால் ஈரான் மண்ணிலிருந்து தாக்குவோம் - வடகொரியா எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
மேற்காசிய விவகாரத்தில் தென்கொரியா தலையிட்டால் ஈரான் மண்ணிலிருந்து தாக்குவோம் - வடகொரியா எச்சரிக்கை!

மத்தியகிழக்கு விவகாரங்களில் தென் கொரியா தலையிட்டால், ஈரான் மண்ணிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்  என வட கொரியா தெரிவித்துள்ளது.

அத்துடம் இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் போக்குகளில் தென் கொரியா தனது ராணுவத்தையோ அல்லது நேரடித் தலையீட்டையோ முன்னெடுத்தால், அதற்குப் பதிலடியாக ஈரானியப் பிரதேசத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதல்களை முன்னெடுப்போம் என வடகொரிய தரப்பு தெரிவித்துள்ளது.

வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நீண்டகாலமாக ராணுவ ரீதியாக நெருங்கிய உறவைக் கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

வடகொரியாவின் ஏவுகணை தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஈரானுக்கு வழங்கப்படுவதாக ஏற்கனவே சர்வதேச நாடுகள் சந்தேகம் தெரிவித்து வரும் சூழலில், இந்த நேரடி எச்சரிக்கை அக்கூட்டணியை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

​இதேநேரம் தென் கொரியாவின் செயல்பாடுகளுக்கு இஸ்ரேலை இலக்காக வைப்பதன் மூலம், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு இடையே நெருக்கடியை ஏற்படுத்த வடகொரியா திட்டமிடுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

​இந்த அறிவிப்பானது கொரிய தீபகற்பம் மட்டுமின்றி, மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பாதுகாப்பற்ற நிலையை அதிகரித்துள்ளது.

வடகொரியாவின் இந்த ஆக்ரோஷமான கருத்துக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்கா தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான விரிவான பதில்கள் வரவில்லை. இருப்பினும், பிராந்திய அமைதியைக் குலைக்கும் இத்தகைய மிரட்டல்களை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

Radio