மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு பின்னரான வன்முறை - 4 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கொல்கத்தாவின் பெலேகாட்டா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஏஜென்ட் பிஸ்வஜித் பட்நாயக் (45) மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது ஒரு கும்பலால் விரட்டப்பட்டு தாக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘அவர் ஒரு குழாயின் மேல் விழுந்ததால் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்து உயிரிழந்துள்ளார்’ என்று தெரிவித்தனர்.
இதேபோல் நியூ டவுன் பகுதியில் பாஜக தொண்டர் மது மொண்டல் (46) திரிணாமுல் ஆதரவாளர்களுடனான மோதலில் கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் கவுன்சிலர் அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது.
கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். உதயநாராயண்பூர் பகுதியில் பாஜக நிர்வாகி ஜாதவ் பார் (45) அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதேபோல் நானூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் அபீர் ஷேக் (45) மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்




