ஈரான் - அமெரிக்கா இடையே உடன்பாட்டை எட்டுவதில் பெரும் முன்னேற்றம் - பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வழங்கிய தகவலின்படி, அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக Axios நிறுவனம் செய்தி வௌியிடப்பட்டது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் பெரும் முன்னேற்றம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பதும் அடங்கும்.
இதேவேளை, நியாயமான மற்றும் முழுமையான” ஒப்பந்தத்தை ஈரான் ஏற்கும் என தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் திடீரென சரிந்துள்ளன;
இதன்படி WTI crude 12% வீழ்ச்சியடைந்து பீப்பாயுக்கு $89.66 ஆகவும்,
Brent crude 11% குறைந்து $98.14 ஆகவும் வர்த்தகமாகின்றன.




