துருக்கியில் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள அதிரடிச் சலுகை - அதிபர் தய்யிப் எர்டோகன்!

துருக்கியில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு விகிதத்தை மீட்டெடுக்க, அதிபர் ரெசெப் தய்யிப் எர்டோகன் "குடும்பம் மற்றும் மக்கள் தொகை தசாப்தம்" (2026–2035) என்ற 10 ஆண்டுகால பிரம்மாண்ட திட்டத்தை முன்வைத்துள்ளார்.
நாட்டின் பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1.48 ஆகக் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, எதிர்கால சந்ததியினரை உறுதிப்படுத்தவும் குடும்பக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்தத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ், முதல் குழந்தைக்கு ஒருமுறை மானியமாக 5,000 லிரா வழங்கப்படுவதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை மாதாந்த கொடுப்பனவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தத் தொகைகள் நேரடியாகத் தாயின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அத்துடன், புதிய தம்பதிகளுக்கு வட்டியற்ற கடன் வசதி, நீடிக்கப்பட்ட மகப்பேறு விடுமுறை மற்றும் பகுதி நேர வேலை உரிமை போன்ற பல்வேறு சலுகைகள் ஊடாக இளம் தலைமுறையினரைத் திருமண வாழ்வை நோக்கி ஊக்குவிக்க துருக்கி அரசு திட்டமிட்டுள்ளது.




