ஈரான் - ஐக்கிய அரபு இராச்சியம் இடையே பதற்றம்! . ..

ஈரான் ஏவிய 15 ஏவுகணைகள் மற்றும் நான்கு ஆளில்லா வானூர்திகளை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், புஜைராவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
ஈரான் தரப்பில் இருந்து இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கடற்படை விடுத்த எச்சரிக்கையை மீறிய அமெரிக்கக் கப்பல் மீது இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் ராணுவத்தை மேற்கோள் காட்டி கூறியிருந்தன.
இருப்பினும், எந்தவொரு கப்பலும் தாக்கப்படவில்லை என்று அமெரிக்க இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது
000




