ஹார்முஸ் நீர்ச்சந்தியில்அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

ஹார்முஸ் நீர்ச்சந்தியில் அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் ஜஸ்க் தீவு அருகே சென்றுகொண்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல், ஈரானிய பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையை மீறியதாகக் கூறி இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் காரணமாக அந்தப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கத் தரப்பு இந்தச் செய்தியைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரானின் புதிய கட்டுப்பாட்டு விதிகளால் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.




