வர்த்தகக் கொள்கைகளை தன்னிச்சையாகத் தொடருவோம் - சீனா அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவின் எந்தவிதமான தடைகளுக்கும், எதிராக தனது உறுதியான நிலைப்பாட்டை சீனா வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக எரிசக்தி இறக்குமதி உட்பட, தனது வர்த்தகக் கொள்கைகளைத் தன்னிச்சையாகத் தொடரும் என்றும் அது கூறியுள்ளது.
ஈரான் தொடர்பான எண்ணெய் வர்த்தகம் குறித்து வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே வளர்ந்து வரும் உரசல்களை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன் இது உலகளாவிய எரிசக்தி மற்றும் புவிசார் அரசியல் இயக்கவியலை மேலும் மாற்றியமைக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.




