SuperTopAds

IRIS Dena மூழ்கடிப்பு -அமெரிக்க தாக்குதலுக்கு இலங்கை உதவியது - ஈரான் குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Editor IV
IRIS Dena மூழ்கடிப்பு -அமெரிக்க தாக்குதலுக்கு இலங்கை உதவியது - ஈரான் குற்றச்சாட்டு!

இலங்கையின் காலிக் கடற்பரப்பிற்கு அண்மித்த பகுதியில் கடந்த மார்ச் 4, 2026 அன்று ஈரானியப் போர்க்கப்பலான IRIS Dena அமெரிக்காவால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில், உயிர் தப்பியவர்களின் புதிய சாட்சியங்கள் தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, கப்பலின் கப்டன் அபுசார் சாரி (Abuzar Zarri) மற்றும் முதன்மை அதிகாரி வழங்கியுள்ள வாக்குமூலங்கள், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு திட்டமிட்ட 'போர்க்குற்றம்' என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளது.

​சம்பவ தினத்தன்று அதிகாலை 3:35 மணிக்கு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட முதல் டொர்பிடோ (torpedo) கப்பலைத் தாக்கியது.

இதில் கப்பலின் அடிப்பகுதி சேதமடைந்து கப்பல் நகர முடியாமல் நின்றது.

இருப்பினும், இந்த முதல் தாக்குதலில் எவரும் உயிரிழக்கவில்லை.

கப்பல் செயலிழந்ததையடுத்து, கப்டன் அபுசார் சாரி அனைத்து வீரர்களையும் வெளியேறுவதற்காகக் கப்பலின் பின்புறத் தளத்தில் (Aft deck) ஒன்றுசேருமாறு உத்தரவிட்டார்.

சுமார் 90 நிமிடங்கள் வீரர்கள் அங்கு காத்திருந்த நிலையில், சரியாக அதிகாலை 5:06 மணிக்கு இரண்டாவது டொர்பிடோ அதே இடத்தில் பாய்ந்தது.

இது அதிகப்படியான உயிர்களைப் பறிக்கத் திட்டமிட்டு நடத்தப்பட்ட 'இரட்டைத் தாக்குதல்' (Double-tap strike) என கப்டன் குற்றம் சாட்டியுள்ளார். 

​இந்தியாவில் நடைபெற்ற 'MILAN 2026' சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்தது.

குறித்த் பயிற்சியின் நிபந்தனைப்படி, பங்கேற்கும் கப்பல்கள் ஏவுகணைகள் அல்லது டொர்பிடோக்களைக் கொண்டு செல்லக் கூடாது என்பதால், IRIS Dena தாக்குதலின் போது முற்றிலும் ஆயுதமற்ற நிலையில் இருந்தது.

இதனால் அமெரிக்கத் தாக்குதலைத் தற்காத்துக் கொள்ள எவ்வித வழியும் இன்றி 104 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இவர்களில் 20 பேரின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. 

​கப்பல் ஆபத்தில் இருந்த போது இலங்கையிடம் அடைக்கலம் கோரியும், அனுமதி வழங்கக் காலதாமதம் செய்யப்பட்டதால் கப்பல் சர்வதேச கடல் எல்லையிலேயே காத்திருக்க நேரிட்டது.

இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னரே அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாக கப்டன் தெரிவித்தார்.

இந்தத் தாமதமானது மறைமுகமாக அமெரிக்காவின் தாக்குதலுக்கு உதவியதாக ஈரான் தரப்பு குற்றம் சாட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.

Radio