"ஈரான் அருகே சரக்குக் கப்பல் மீது தாக்குதல்" - மேற்காசிய வலயத்தில் தொடரும் பதற்றம்!

ஈரான் கடற்கரை அருகே வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாரிய சரக்குக் கப்பல் ஒன்றின் மீது பல சிறிய படகுகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இங்கிலாந்தின் கடல் வர்த்தக நடவடிக்கைகளுக்கான முகமை (UKMTO) தகவலை வெளியிட்டுள்ளது.
குதிப்பாக ஈரானின் சிரிக் (Sirik) நகருக்கு மேற்கே சுமார் 11 கடல் மைல் (18 கி.மீ) தொலைவில் இந்தக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக UKMTO தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனாலும் கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அந்த முகமை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




