ஈரான் சமர்ப்பித்த புதிய அமைதித் திட்டம் - அம்மலப்படுத்திய அல் ஜசீரா!

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் சமர்ப்பித்துள்ள புதிய அமைதித் திட்டம் குறித்த புதிய தகவல்கள் அல் ஜசீரா செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.
ஈரான் முன்வைத்துள்ள இந்த அமைதித் திட்டமானது மூன்று முக்கிய கட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், 30 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி முழுமையான போரை முடிவுக்குக் கொண்டுவருவதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கிக்கப்படுகின்றது
மேலும், மத்திய கிழக்கு முழுவதும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், மீண்டும் போர் ஏற்படாமல் தடுப்பதற்கும் இஸ்ரேல் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஆக்கிரமிப்பின்மை உறுதிமொழியை வழங்க வேண்டும் என இந்தத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
இதன் முதல் கட்டமாக, ஹோர்முஸ் நீரிணை படிப்படியாகத் திறக்கப்பட்டு, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்.
அத்துடன், கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பொறுப்பை ஈரான் ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




