SuperTopAds

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!

ஆசிரியர் - Admin
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் லெபனான் மற்றும் பெய்ரூட் மீது உக்கிரமான தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. 

இதற்குப் பதிலடியாக, சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தி (வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

 பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் முயற்சியால் உருவான இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகுவதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடர்வதால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு எண்ணெய் கப்பலும் செல்ல அனுமதி இல்லை என ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது.

 போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் ஹோர்முஸ்  ஜலசந்தியை மீண்டும் திறக்க அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனினும், லெபனானில் தாக்குதல் நிறுத்தப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் என ஈரான் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.