ஊடகவியலாளரின் வீட்டில் இரண்டாவது நாளாகவும் திருட்டு முயற்சி: யாழில் வெற்றிகரமாக முறியடிப்பு

ஆசிரியர் - Admin
ஊடகவியலாளரின் வீட்டில் இரண்டாவது நாளாகவும் திருட்டு முயற்சி: யாழில் வெற்றிகரமாக முறியடிப்பு

யாழ். குப்பிளானில் ஊடகவியலாளரின் வீட்டில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற திருட்டு முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை(05) அதிகாலை நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.குப்பிளான் தெற்கு வீரமனைப் பகுதியில் ஊடகவியலாளர் உட்பட வீட்டிலுள்ள அனைவரும் நன்கு உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஊடகவியலாளர் தற்செயலாக விழித்துப் பார்த்த போது அவர் உறங்கிக் கொண்டிருந்த பகுதிக்கு அண்மையில் பூட்டப்பட்டிருந்த யன்னலின் இடைவெளிக்குள்ளால் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதை அவதானித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த ஊடகவியலாளர் உடனடியாகச் சத்தமிடுவதைத் தவிர்த்துப் புத்திசாதுரியமாகச் செயற்பட்டுள்ளார். அங்கிருந்த கட்டிலிலிருந்து மெதுவாக எழுந்து சென்ற அவர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த தனது இளைய சகோதரனை இரகசியமான முறையில் எழுப்பியுள்ளார்.

பின்னர் வீட்டிலிருந்த அனைவரும் உறக்கம் தெளிந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர் உட்பட அனைவரும் உரக்கச் சத்தமிட்டவாறு சுற்றும் முற்றும் தேடியுள்ளனர். எனினும், திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி திருட்டு முயற்சி இடம்பெற்ற சிறிது நேரத்தில் குறித்த வீட்டிலிருந்து வடக்குப் பக்கமாகச் சுமார்-500 மீற்றர் தூரத்தில் சிலர் ஓடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்று(04) இரவு-11 மணியளவில் குப்பிளான் தெற்கில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைச் சூழலிலும் திருடர்களின் நடமாட்டம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு