சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் சவுதி அரேபியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டு ஆளில்லா வானூர்தி தாக்குதல் முயற்சிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன.
வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்ட ஆளில்லா வானூர்தி பாகங்கள் சிதறி வீழ்ந்ததில் சுத்திகரிப்பு நிலையப் பகுதியில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை இந்த சம்பவத்தில் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




