ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரி உறுதி!

ஈரானின் நீண்டகால உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் உள்ள முக்கிய இலக்குகளைக் குறிவைத்து இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மூத்த இஸ்ரேலிய அதிகாரி, இந்தத் தாக்குதலில் 86 வயதான அலி காமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அவரது உடல் மீட்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவலை ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, “எங்களுக்குத் தெரிந்தவரை அவர் உயிருடன் இருக்கிறார்” என்று முரண்பட்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.




