SuperTopAds

மெக்சிக்கோவில் பாரிய வன்முறை - வாகனங்களுக்கு தீ வைப்பு

ஆசிரியர் - Editor II
மெக்சிக்கோவில் பாரிய வன்முறை - வாகனங்களுக்கு தீ வைப்பு

மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்ட நபரான போதைப்பொருள் கும்பல் தலைவர் “எல் மெஞ்சோ”, கைது நடவடிக்கையின் போது உயிரிழந்துள்ளார். 

இந்த நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறையும் ஈடுபட்டிருந்தது. அவர் கொல்லப்பட்டதையடுத்து, மெக்சிகோவில் பரவலாக வன்முறை வெடித்துள்ளது.

மெக்சிகோவில் மிகவும் அஞ்சப்படும் ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் (CJNG) எனப்படும் போதைப்பொருள் கும்பலின் தலைவர் “எல் மெஞ்சோ” என அழைக்கப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டசை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யமுற்பட்ட வேளை அவருடைய ஆதரவாளர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த நிலையில் “எல் மெஞ்சோ” உயிரிழந்தார்.

“எல் மெஞ்சோ” கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பல்வேறு மாகாணங்களில் கும்பல்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு, வாகனங்களுக்குத் தீ வைப்பு மற்றும் வீதிகளை வழிமறித்தல் (Bloqueos) போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.


Radio