SuperTopAds

வீடமைப்புத் தொகுதியில் மேல் மாடியிலிருந்து கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
வீடமைப்புத் தொகுதியில் மேல் மாடியிலிருந்து கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியில் மேல் மாடியிலிருந்து கொங்க்ரீட் துண்டு ஒன்று விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.

முகத்துவாரத்திலுள்ள ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பின் 07ஆவது மாடியின் 02 வீடுகளுக்கு இடையில் காணப்பட்ட சீமெந்து கலவை நேற்று காலை கடைக்கு சென்ற 7 வயதான சிறுவனின் தலையில் வீழ்ந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். 

குறித்த கட்டடத் தொகுதியின் உறுதி மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Radio