SuperTopAds

அரசின் ஊழல்களை மறைக்க எம்மை நீதிமன்றத்திற்கு அழைப்பதில் பயனில்லை

ஆசிரியர் - Editor II
அரசின் ஊழல்களை மறைக்க எம்மை நீதிமன்றத்திற்கு அழைப்பதில் பயனில்லை

அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் மற்றும் கொள்கலன் முறைகேடுகளை மறைப்பதற்காகவே தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை நீதிமன்றத்திற்கு அழைத்து வேட்டையாடும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். 

கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கலிங்கா பல்கலைக்கழகம் தனக்கு விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்று உரையாற்றியமைக்காக அரசாங்கம் தேவையற்ற விதத்தில் பதற்றமடைந்துள்ளனர்.. 

இவ்வாறான சர்வதேச அங்கீகாரங்களைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை எனவும், சிஸ்டத்தை மாற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது இருக்கும் சிஸ்டத்தையும் அழித்து வருகின்றனர்.

தமக்கு சாதகமாகச் செயற்படாத நீதிபதிகளை இடமாற்றம் செய்வது மற்றும் பொலிஸாரை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துவது போன்ற செயல்களின் மூலம் அரசாங்கம் நீதித்துறையில் தலையிடுகின்றனர். 

நிலக்கரி இறக்குமதி ஊழல் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட சம்பவங்களை மறைக்கவே இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இவற்றுக்கு அஞ்சப்போவதில்லை என தெரிவித்தார்.

Radio