தாண்டிக்குளத்தில் தண்டவாளத்தை தாண்ட முயன்ற பெண் மயிரிழையில் தப்பினார்!

வவுனியா- தாண்டிக்குளத்தில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த பெண் இன்று காலை வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியுள்ளது.
விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது - 52) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




