SuperTopAds

குளத்தின் வான் பகுதியில் T56 துப்பாக்கி மீட்பு

ஆசிரியர் - Editor II
குளத்தின் வான் பகுதியில் T56 துப்பாக்கி மீட்பு

பொலன்னறுவை, திம்புலாகல சொரிவில குளத்தின் வான் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்றினை மன்னம்பிட்டிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை சென்ற பொலிஸார், குறித்த துப்பாக்கியினை கைப்பற்றியுள்ளனர்.

துருப்பிடித்திருந்த நிலையில் காணப்பட்ட இத்துப்பாக்கி கடந்த யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

Radio