SuperTopAds

தேனிலவை கொண்டாட சிறந்த இடங்கள் இலங்கையில்

ஆசிரியர் - Editor II
தேனிலவை கொண்டாட சிறந்த இடங்கள் இலங்கையில்

உலகின் தேனிலவு கொண்டாட உலகில் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களை இலங்கை பெற்றுள்ளது.

உலகப் புகழ் பெற்ற சுற்றுலா ஆலோசனை நிறுவனமான ‘ட்ரிப் அட்வைசர்’ (TripAdvisor) வெளியிட்ட அண்மைய அறிக்கைக்கு அமைய இந்த இடங்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்களுக்கு மத்தியில் 5 ஆவது இடம் காலி நகருக்குக் கிடைத்துள்ளது.

அந்த அறிக்கையில் 13 ஆவது இடம் எல்ல (Ella) நகருக்கும், 22 ஆவது இடம் தங்காலை நகருக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வறிக்கைக்கு அமைய, உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடமாக இந்தோனேசியாவின் பாலி கருதப்படுவதுடன், இரண்டாவது இடம் மொரிஷியஸுக்கும் மூன்றாவது இடம் மாலைதீவுக்கும் கிடைத்துள்ளது.

கடந்த வருடம் உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Radio