பாணந்துறை கடலில் அடித்து செல்லப்பட்ட நபர்: உயிரைக் காப்பாற்றிய பொலிஸார்!

பாணந்துறை கடலில் நீராடச்சென்று, அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் பொலிஸாரினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை பதிவாகியுள்ளது.
மீட்கப்பட்ட நபர் கெஸ்பேவ பகுதியை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.




