SuperTopAds

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் மீது அமெரிக்கா அதிரடி

ஆசிரியர் - Editor IV
சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் மீது அமெரிக்கா அதிரடி

தாக்குதல் சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) அமைப்பினர் மீது அமெரிக்கப் படைகள் நேற்று மீண்டும் ஒருமுறை பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 கடந்த மாதம் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இது அமைந்துள்ளது.

 கடந்த மாதம் சிரியாவின் பல்மைரா (Palmyra) பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அமெரிக்காவை சேரந்த இரு படையினர், அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் அயாத் மன்சூர் சகாத் ஆகியோர் கொல்லப்பட்டனர். 

 இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். 

 அதன்படி, இந்த பதிலடி தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்க நிர்வாகம் 'ஒபரேஷன் ஹொக்கீ ஸ்டிரைக்' எனப் பெயரிட்டுள்ளது. 

 இந்த தாக்குதலில் சிரியா முழுவதும் பரவியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பல முக்கிய நிலைகள் தகர்க்கப்பட்டன.

Radio