குளத்தில் பூப்பறிக்க சென்ற சிறுவன் குளத்தினுள் விழுந்து உயிரிழப்பு

அநுராதபுரம், கல்கிரியாகம - உஸ்ஸான பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை குளத்தில் பூப்பறிக்க சென்ற சிறுவன் குளத்தினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனே உயிரிழந்துள்ளான்.
குளத்தில் தாமரை பூ பறிக்கச் சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




