SuperTopAds

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்- சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆசிரியர் - Editor III
இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்- சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

இரு  தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்- சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

 

 இரு  தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை   மீண்டும்   இணைந்து சாதகமான பல முடிவுகளை இவ்விடயத்தில் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு  எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை குறித்த வழக்கு   சம்மாந்துறை  நீதிவான்  நீதிமன்றினால்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின்  சம்மாந்துறை  வீரமுனை பிரதேசத்திற்கான   வரவேற்பு வளைவு   பிரதேச சபையின் அனுமதி இன்றி அமைக்க ஆரம்பித்தமை தொடர்பிலான  வழக்கு  வெள்ளிக்கிழமை(9)  சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

 அடுத்த தவணைக்கு முன்னதாக இரண்டு சமூகங்களும் மீண்டும்  சேர்ந்து இதை எப்படியாவது  தீர்த்துக் கொள்வது என்பதை குறித்து ஆராய்ந்து ஒரு இணக்கப்பாட்டிற்கு   முயற்சி  மேற்கொள்ள வேண்டும் என சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு  தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் மன்றில் அறிவுறுத்தல் வழங்கினார்.

 

இதன்போது  இரு தரப்பினரதும் வாதப்பிரதி வாதங்களை ஆராய்ந்த நீதிவான் இரு தரப்பினரும் இணைந்து சாதகமான பல முடிவுகளை இவ்விடயத்தில் எடுத்திருந்த போதிலும் சரியான தெளிவின்மையான செயற்பாடுகள் காணப்படுவதனால் மீண்டும் ஒரு முறை  இரு  தரப்பினரும் குறித்த விடயத்தில் சமூக பொறுப்பினை  உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதவான் நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டது.அத்துடன்  எதிர்வரும்  06.03.2026 திகதிக்கு முன்பாக இரு தரப்பினரும் குறித்த விடயத்தின் முடிவினை ஆரோக்கியமானதாக பெற வேண்டும் என  நீதிவான் மேலும்  குறிப்பிட்டார்.அத்துடன்  இது அதிகாரம் சம்மந்தபட்ட விடயம் அல்ல என்பதுடன்  இது சமூகம் சார்ந்த விடயம் எனவும் மீண்டும்  குறிப்பிடப்பட்டு  சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொதுநலமான இவ்விவகாரத்தினை இரு தரப்பினரும் பாரபட்சம் காட்டாமல் இணைந்து  தீர்க்கமான முடிவினை அடுத்த வழக்கு தவணையின் போது தெரிவிப்பார்கள் என நீதிமன்றம் உத்தேசித்துள்ளது.

அத்துடன் குறித்த வழக்கில்  சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் சட்டத்தரணிகளான பௌஸான் சாமிளா  மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில்  தமிழரசுக் கட்சியின் கல்முனை  தொகுதிக்கான இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான அ. நிதான்சன் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்தனர்.

இது தவிர  இந்த வீரமுனை வரவேற்பு வளைவு பிணக்கை இணக்கமாக சட்ட அனுமதியோடு தீர்ப்பதற்காக  மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆந் திகதி  அன்று வரை குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த தவணையின் போது இரண்டு சமூகங்களும் சமூகமாக வாழ வேண்டும் என்று கருத்தினை கொண்டு இரண்டு சமூகங்களுக்கும்   சேர்ந்து பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு  வர முடியுமாக இருந்தால்  அனுமதியை கொடுப்பதில்  தங்களுக்கு எந்த விதமான தடையும் இல்லை என  பிரதேச சபை தெரிவித்திருந்தனர்.

ஆகையினால் அடுத்த தவணைக்கு முன்னதாக இரண்டு சமூகங்களும் சேர்ந்து இதை எப்படியாவது  தீர்த்துக் கொள்வது என்பதை குறித்து ஆராய்ந்து ஒரு இணக்கப்பாட்டிற்கு   முயற்சி  மேற்கொள்ள வேண்டும் என பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.இவ்வாறு குறிப்பிட்ட போதிலும் இரண்டு சமூகங்களும் ஏலவே  இணைந்து முன்னெடுத்த இணக்கப்படானது போதியளவு தீர்வு காண பல குறைபாடுகள் காணப்பட்டமையினால் நீதிவான் மீண்டும் ஒன்று கூடி எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆந் திகதிக்கு முன்னர் மன்றில் தீர்வினை இரண்டு சுமூகங்களுக்கும் பாதகம் இன்றி பெற்றுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கானது கடந்த வரும் செப்டம்பர் மாதம் வழக்கு தொடுக்கப்பட்டிருந்ததுடன் வழக்கின்  ஆரம்பத்தில் சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளான சுதர்சன் கமல் பெனிஸ்லஸ் துஷான் அ.நிதான்சன் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்தனர்