நாடளுமன்றில் அருச்சுனா எம். பி முன்வைத்த கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு அருகில் தன்னை இருத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நாடாளுமன்றில் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான அருச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அருகருகே இருந்து தர்க்கப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் , " நாடாளுமன்றில் தான் எனக்கு அருகில் ஆசனம் ஒதுக்கியுள்ளார்கள் என்றால் , இங்கேயுமா ?" என தொனிப்பட கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் , இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இல்லாத வேளை , கஜேந்திரகுமாருக்கு அருகில் எனக்கு ஆசனம் வேண்டாம் என அருச்சுனா இராமநாதன் நாடளுமன்றில் கோரிகையை முன்வைத்துள்ளார்.




