SuperTopAds

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு - பெண்ணொருவர் கைது

ஆசிரியர் - Editor II
சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு - பெண்ணொருவர் கைது

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 

அதேவேளை கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Radio