SuperTopAds

இலங்கையில் அவுஸ்திரேலிய பெண் ஊடகவியலாளருக்கு நடந்த துயர சம்பவம்

ஆசிரியர் - Editor II
இலங்கையில் அவுஸ்திரேலிய பெண் ஊடகவியலாளருக்கு நடந்த துயர சம்பவம்

காலி - உணவட்டுன கடற்கரைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைப்பையைத் திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருடப்பட்ட பையினுள் iPhone ரக கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் பணம் என்பன இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio