SuperTopAds

புடினை அழிக்க 91 ட்ரோன்கள் ஆதாரங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்த ரஷ்யா

ஆசிரியர் - Editor IV
புடினை அழிக்க 91 ட்ரோன்கள் ஆதாரங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்த ரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஆதாரங்களை ரஷ்யா அமெரிக்காவிடம் கையளித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கருத்து வெளியிட்டுள்ளார்.

 அவர், “வால்டை ஏரி அருகே உள்ள புடினின் இல்லத்தை உக்ரைன் 91 ட்ரோன்களால் தாக்கி அழிக்க முயன்றது.

அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்கியுள்ளோம்.

இந்தத் தாக்குதல் முயற்சி உக்ரைன் உளவுப் பிரிவால் திட்டமிடப்பட்டது.

அமெரிக்கா இதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Radio