SuperTopAds

வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு; சிறுமி படுகாயம்

ஆசிரியர் - Editor II
வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு; சிறுமி படுகாயம்

கொழும்பு - போதியவத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்  சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, 16 வயதுடைய சிறுமியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிபிப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio