SuperTopAds

தீவிர சிகிச்சையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின்

ஆசிரியர் - Editor IV
தீவிர சிகிச்சையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேமியன் மார்ட்டின், குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் , அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் 54 வயதான அவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நோய் மூளை வீக்கத்திற்கு வழிவகுக்கும், மேலும் இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரரான மார்ட்டினை கோமாவில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் முன்னாள் அவுஸ்திரேலிய கால்பந்து வீரரான பிராட் ஹார்டி வானொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Radio