SuperTopAds

மியன்மாரில் ஐந்து ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாகப் பொதுத்தேர்தல்

ஆசிரியர் - Editor IV
மியன்மாரில் ஐந்து ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாகப் பொதுத்தேர்தல்

மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, இன்று(28.12.2025) முதல் முறையாகப் பொதுத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

குறித்த தேர்தலை ஒரு 'போலித் தேர்தல்' என சர்வதேச சமூகமும், மியன்மாரின் ஜனநாயக ஆதரவு அமைப்புகளும் கடுமையாகச் சாடியுள்ளன.

மியன்மாரின் 330 தொகுதிகளில் 274 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.

நாட்டின் 20% பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

இதனால் மியன்மாரின் முக்கியத் தலைவரான ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கட்சியான 'தேசிய ஜனநாயக லீக்' (NLD) கலைக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Radio