SuperTopAds

உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா வான்வழித் தாக்குதல்...

ஆசிரியர் - Editor IV
உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா வான்வழித் தாக்குதல்...

கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கும் வேளையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ஒரு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது.

குறித்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சைட்டோமிர் (Zhytomyr) பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவனும் பலியானார்.

மேலும் தாக்குதல்களில் கீவ் பகுதியில் 76 வயது பெண்மணியும், மேற்கு உக்ரைனின் க்மெல்னிட்ஸ்கி (Khmelnytskyy) பகுதியில் 72 வயது முதியவரும் உயிரிழந்தனர்.

ரஷ்யா மொத்தம் 635 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைனின் விமானப்படை அறிவித்துள்ளது. இதில் 621 தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா மொத்தம் 635 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் 621 தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Radio