முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும் நிலையில் நண்பரை ரகசிய திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி-வெளியான பின்னணி

முன்னாள் மனைவி ரகசியமாக மறுமணம் செய்துகொண்ட தகவல் வெளியான நிலையில், பிரபல வீரர் டாம் பிராடி வெளியிட்டுள்ள குழப்பமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் பிரபல கால்பந்து ஜாம்பவான் டாம் பிராடியின் முன்னாள் மனைவியும், புகழ்பெற்ற மாடல் அழகியுமான ஜிசல் புண்ட்சென், தனது நீண்ட நாள் நண்பரான ஜோகியம் வேலன்டே என்பவரை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் கடந்த 3ம் தேதி புளோரிடா மாகாணத்தில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.
இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்த நிலையில், தற்போது அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இந்தத் தகவல் தாமதமாக வெளிவந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




