ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

இன்று காலை(19) 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான குண்டுஸிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




