SuperTopAds

அமெரிக்காவில் ஜெட் விமான விபத்தில் ஏழு பேர் பலி-வெளியான அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவில் ஜெட் விமான விபத்தில் ஏழு பேர் பலி-வெளியான அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்க, வட கரோலினாவின் ஸ்டேட்ஸ்வில்லில் ஏற்பட்ட வணிக ஜெட் விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கரோலினாவில் உள்ள ஸ்டேட்ஸ்வில்லே பிராந்திய விமான நிலையத்தில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட கடுமையான தீ விபத்தினால் முறையான உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என கூறப்படுகின்றது.

இந்த விமானம் புளோரிடாவுக்கு செல்லவிருந்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முற்பகல் 10:15 மணியளவில் கடுமையான வானிலை காரணமாக வட கரோலினா விமான நிலையத்திற்கு திரும்ப முயன்றதாக விமான கண்காணிப்பு தளமான FlightAware தெரிவித்துள்ளது.

Radio