SuperTopAds

அமெரிக்க ஜனாதிபதி விதிக்கப்பட்ட மற்றுமொரு தடை...

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க ஜனாதிபதி விதிக்கப்பட்ட மற்றுமொரு தடை...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பயணத் தடையை விரிவுபடுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது சிரியா மற்றும் பாலஸ்தீன நாடுகளில் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் உட்பட, நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குடிமக்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் ஆறு நாடுகளைச் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி பிரகடனத்தின் படி, புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவது முழுமையாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 15 நாடுகளின் குடிமக்கள் சில விசா வரம்புகள் உட்பட பகுதி கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

குறித்த கட்டுப்பாடுகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டபூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள், விசா வைத்திருப்பவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வேறு சில பிரிவுகளுக்கும் இது பொருந்தும் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

இருப்பினும் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் புதிய விசா விண்ணப்பங்கள் கடுமையான ஆய்வு அல்லது மறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio