SuperTopAds

தாய்லாந்தின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ளும் கம்போடியா!

ஆசிரியர் - Editor IV
தாய்லாந்தின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ளும் கம்போடியா!

தாய்லாந்தில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டும் 75 பேர் வரை காயப்பட்டும் உள்ளனர், மேலும் 410,000 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.

தரைவழி, கடல் மற்றும் F-16 போன்ற பலமான தாக்குதல் விமானங்களினால் ஆகாய மார்க்கமாகவும் தொடர்ந்து தாக்குகிறது தாய்லாந்து.

தாய்லாந்தோடு ஒப்பிடும்போது கம்போடியாவிடம் இராணுவ பலமானது மிகச்சிறியது. இருப்பினும், நேரடி தாக்குதல்களால் எல்லைப்புறங்களை கம்போடிய இராணுவம் காப்பாற்ற போராடி வருகிறது.

பல நாடுகள் இணைந்து இரு நாடுகளையும் சமாதான நிபந்தனைகளுக்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. இதற்கு, கம்போடிய தரப்பு ஆர்வம் காட்டுகின்ற போதும், தாய்லாந்து யுத்த நிறுத்தம் குறித்து எந்த ஆர்வமும் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

யுத்தம் மேலும் தீவிரமடைந்து வருவதால் போர் பதற்றம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radio