பணம் பறிக்கும் மோசடி வலையமைப்பு - மக்களே உஷார் !!

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களாக நடித்துப் பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குழுக்கள் குறித்து மக்களுக்குக் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள், இலங்கை பொலிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) அதிகாரிகள் என்றோ அல்லது வங்கிப் பிரதிநிதிகள் என்றோ தவறாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி ஏமாற்ற முயற்சிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு பொலிஸ் அதிகாரியோ அல்லது அரச நிறுவனமோ தொலைபேசியில் பணம், வங்கி விபரங்கள் அல்லது ரகசிய தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கோர மாட்டார்கள்
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் பெறும் பொதுமக்கள் உடனடியாக அழைப்பைத் துண்டித்து, எந்தத் தகவலையும் பகிர்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் மோசடி அழைப்புகள், வட்ஸ்அப் தகவல்கள் அல்லது அழைப்புப் பதிவுகள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.




