அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற சுகாதார அமைச்சர்

வெள்ள அனர்த்தம் காரணமாக சிலாப மாவட்ட மருத்துவமனை ரூ.1200 மில்லியனுக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இதன்போது அங்கு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விஐயம் மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, வெளிநோயாளர் பிரிவு, மருத்துவமனை வளாகம், வார்டுகள், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ஹீமோடையாலிசிஸ் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம், இரத்த வங்கி, எக்ஸ்ரே சிகிச்சை பிரிவு, சி.டி ஸ்கான் சிகிச்சை பிரிவு, மருத்துவ குடியிருப்புகள், மற்றும் சுகாதார ஊழியர் குடியிருப்புகள் உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளையும் சுகாதார அமைச்சர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையின் எதிர்கால சேவைகளை படிப்படியாக செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் மற்றும் முக்கிய தேவைகள் குறித்து சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையின் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடலை மேற்கொண்டார்,
எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் கூறினார். அனர்த்தம் காரணமாக சிலாபம் மாவட்ட மருத்துவமனை ரூ. 1200 மில்லியனுக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாகவும், வழக்கம் போல் மருத்துவமனையால் சேவைகளை செயல்படுத்த சுமார் ரூ. 1200 மில்லியன் செலவிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் எதிர்காலத்தில் மருத்துவமனையை இருந்ததை விட உயர் தரத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.




